திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் குமார்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் திமுக ஆட்சி ஏற்ற பிறகு அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பொதுமக்கள் நோய் இன்றி வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளதாக திருவாரூரில் கலைஞர் நூறாண்டு நினைவு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பேச்சு
திருவாரூர் நியூ பாரத் பள்ளியில் கலைஞர் நுற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த முகாமில் சர்க்கரை அளவு,ஈசிஜி,இரத்த அழுத்தம்,கண் பார்வை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பேசிய பூண்டி கலைவாணன் தெரிவித்த போது… கடந்த 10 ஆண்டுகளாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது திமுக ஆட்சி ஏற்ற பிறகு புதிய தரம் உயர்த்தப்பட்டது
இதன் தொடர்ச்சியாக அதிநவீன கேத்தலாக் இயந்திரம் ,எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதனால் நோய்களை முன்கூட்டியே அறிந்து நோய்களை குறைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்
இந்த முகாமில் மருத்துவ அணி மாநில துணை செயலாளர் அஞ்சுகம் பூபதி,பொதுக்குழு உறுப்பினர் செந்தில்,நகர கழக செயலாளர் வாரைபிரகாஷ்,நகர மன்ற துணை தலைவர் அகிலாசந்திரசேகர்,மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் திவாகரன், தலைவர் சரவணன்,துணை அமைப்பாளர்கள் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.