ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!
சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் தொடங்கி வைத்தார்! ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரத்தில் நெசவாளர் முன்னேற்ற கழகம் மற்றும் ராஜபாளையம் ஆர்.எஸ். மருத்துவமனை இணைந்து நடத்திய எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சமுசிகாபுரம் மகாதேவி டெக்ஸ்டைல் வளாகத்தில் நடைபெற்ற முகாமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் துவக்கி வைத்து பேசினார்.
டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை சீதாராம் சர்ஜூக்கள் நிறுவனர் சுப்பிரமணியம், நெசவாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் கணேசன், மாநில பொது செயலாளர் சிவலிங்கம் சிறப்பாக செய்திரூந்தனர்.
முகாமில் அ.தி.மு.க முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளரும் ,மாவட்ட கவுன்சிலருமான கே.கே. வேல்முருகன் வெம்பக்கோட்டை முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்ட,ன் முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் பாண்டியன்,ராஜபாளையம் முன்னாள் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுப்பையாதுரை, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பழனி, செல்வம், தங்கமணி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி அவைதலைவர் முத்துக்குமார், ஒன்றிய இலக்கிய அணி துணை செயலாளர் குமார், மாணவரணி ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார், அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் ஜெயக்குமார், மோகன், ராஜேந்திரன், ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், முசிறி கிருஷ்ணன், கணேசன், உமயகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி,
சங்கரபாண்டியாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ஏழை,ஏளிய நெசவாளர்கள் குடும்பத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அனைவருக்கும் மருந்து மாத்திரைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.