பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணி செய்து ஓய்வு பெற்ற தோழர் ஜே.எம்.பாஷா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.மனிதநேய விழாவாக நடைபெற்ற இதில்,பல்வேறு சமய தலைவர்கள்,சமூக அமைப்பினர்,
வங்கி ஊழியர் சங்கத்தினர்,தொழிற்சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர்,மேடையில் வேறுபாடுகளின்றி அமர்ந்துள்ள அனைத்து சமய மக்களின் ஒற்றுமையை சுட்டி காட்டிய அவர்,இது தான் ஜனநாயக இந்தியா,இந்த ஒற்றுமைதான் நமது வலிமை என்றார்.
தொடர்ந்து அவர்,கோவை அழகேசன் சாலையில் உள்ள டி.ஏ.ராமலிங்க செட்டியார் பள்ளியில் நடைபெற்ற முன்னாள். மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் 1990 களில் பயின்ற மாணவர்கள் உட்பட பல்வேறு ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் ஒன்று கூடி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் கௌரவ அழைப்பாளராக கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் பேசுகையில்,இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இந்த ஒற்றுமையே காரணம் என கூறிய அவர்,நமது செயல்களே நம்மை என்றும் நினைவில் நிறுத்தும் என்றார்.இது போன்ற நிகழ்ச்சிகளால் வேற்றுமைகள் கலைந்து ஒற்றுமைகள் வலிமைபடுவதாக அவர் கூறினார்…