ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிகுட்பட்ட மற்றும் நெரிசல் மிகுந்த தென்காசி மதுரை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியபோது
மாடு வளர்ப்போர் பாலை மட்டும் கறந்துகொண்டு அதற்கு தண்ணீர் தீவனம் எதுவும் கொடுக்காமல் சாலையில் விட்டுவிடுகின்றனர்

அப்படி விடப்படும் மாடுகள் சாலையில் கிடைக்கும் கழிவுகளை உண்டுவிட்டு தனது பசியை போக்குகிறது இது தவிற மாடுகள் சில நேரங்களில் ஒன்றை ஒன்று துரத்தி ஓடுவதும் இதனால் பலர் கீழே விழுந்து காயமடைவதும் சகஜமாக நடந்துவருகிறது

இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சிலர் கோரிக்கை வைத்தனர் இதனடிப்படையில் இரண்டு நாட்கள் முன்பு நகராட்சி நிர்வாகம் இதற்கான வேலையை தொடங்கியதில் 9 மாடுகளை பிடித்து பறிமுதல் செய்ததோடு உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபதாரம் மற்றும் பிடிபட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பராமரிப்பார்கள் என்றும் அதற்கற்கான செலவுக்காக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் மாட்டின் உரிமையாளரிடம் வசூல் செய்வதோடு இரண்டாம் முறையாக மாடுகள் பிடிபட்டால் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் என்றும் மூன்றாம் முறை என்றால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அதை பொது ஏலத்தில் விடப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக தெரிவித்தனர்

இதனை கண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் மேலும் சிலர் கூறுகையில் நூற்றுக்கனக்கான மாடுகள் சாலைகளில் சுற்றுகிறது ஒருநாள் நடவடிக்கையாக 9 மாடுகளை பிடித்து தங்கள் கடமையை செய்துள்ளனர் தற்போதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாட்டின் உரிமையாளர்கள் எப்போதும்போல் மாடுகளை சாலையில் விடுவது தொடர்கிறது நகராட்சி நிர்வாகம் இதை வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் இதற்கென்று வருவாய்த்துறை காவல்துறை கொண்ட குழு அமைத்து பிரச்சனைகள் தீரும்வரை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *