குடவாசல் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மாரிமுத்து தலைமை ஏற்று உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக குடவாசல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசும் போது. ஒரு தேசம் கட்டமைப்பு சிறந்து விளங்க ஆரோக்கியமான இளைஞர்களின் மேம்பாடு முக்கியம் ஐ.நா வின் குறிப்பு படி போதைப் பொருள் பரவலாக பயன்பாட்டில் உள்ளது
என தெரிய வருகிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. நம்முடைய நாடு போதைப்பொருள் பயன்பாட்டில் இல்லாத தேசமாக உருவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. இதனை மாணவர்கள் உணர்ந்து போதை இல்லா உலகை உருவாக்கிட அரசிடம் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் தேஷ், மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுரேஷ், முனைவர் பிரபா மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.