கல்ரூயிட் குழுமம் தனது 2வது சர்வதேச மையத்தின் புதிய அலுவலகத்தை கோவை சரவணம்பட்டியில் உள்ளகே.டி.சி. டெக்பார்க்கில்
துவக்கியது.

பெல்ஜியம், பிரான்ஸ், லக்ஸம்பர்க் உள்ளிட்ட இடங்களில் 750 சில்லறை விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது. உணவு, உணவு அல்லாத துறை, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் மற்றும் மொபிலிட்டியில் சேவை மற்றும் தயாரிப்புகளை பல்வேறு பிராண்டுகளில் அளித்து வருகிறது.

கல்ரூயிட் குழுமம், 2007ம் ஆண்டில் ஐதராபத்தில் முதலாவது சர்வதேச மையத்தை துவக்கியது. சில ஆண்டுகளில் இந்தியாவில் தொடர்ந்து விரிவாக்கம் பெற்றது. தகவல் தொழில்நுட்பம் முதல் பன்நோக்கு வணிகத்தையும் கல்ருயிட் குழுமம் மேற்கொண்டது.
கோவையில் புதிய அலுவலகத்தை துவக்கியது. இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தூதுவர் டிடியர் வாண்டர்ஹெசல்ட், தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

கவுரவ விருந்தினராக கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி பக்தவத்சலம், கோவை மாநகர காவல் துறை ஆணையர் வி. பாலகிருஷ்ணன் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கல்குயிட் இந்தியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஹரி சுப்ரமணியன் பேசுகையில், கோவையில் புதிய அலுவலகத்தை துவக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களது குழுமத்திற்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து திட்டங்களிலும் யுக்திகளிலும் டிஜிட்டல் மயமாக்குவதிலும் மாற்றத்திலும் கவனம்
செலுத்தும். கோவையின் பல்வேறு வகையான தொழில் முனையும் கலாச்சாரமும். இன்ஜினியரிங் தொழிலில் மையம், கல்வி சுழல் போன்றவை இங்கு முதலீடு செய்ய எங்களது தேர்வாக அமைந்தது என்றார்.

கல்ரூயிட் குழுமத்தின் தலைமை தகவல் அதிகாரி பீட்டர் வான்பெலிங்கன், கூறுகையில், கல்ருயிட் குழுமத்தின் இந்திய வளர்ச்சியை கோவையில் துவக்கப்பட்டுள்ள அலுவலகம் மேலும் உயர்த்தும், கோவையில் எங்களது பயணம் மாபெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *