விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ராஜகுரு முன்னிலையில் மாவட்ட பொருளாளர் முத்து வெள்ளையப்பன் விளக்க உரையாற்றினார்.
அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும், முடக்கப்பட்ட அகவிலைப்படி 21 மாதம் நிலுவைத் தொகை பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை உடனடியாக வழங்கவும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவும், அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிடக் கோரியும் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ராஜகுரு நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறை, சத்துணவு ஊழியர்கள், மற்றும் அரசு துறை ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷமிட்ட ஆர்ப்பாட்டம் செய்தனர்.