ஜெ. எஸ் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக ஜெ. எஸ் நகரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை கையகப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரியும் மாநகராட்சி
அலுவலக கட்டிட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதியகட்டுமான பணியில் உள்ள விதிமீறலை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்யும்படி மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் கோரிக்கை மனு நேரில் சமர்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக் குழுவினரை அனுப்பி வைப்பதாக ஆணையர் உறுதியளித்தார் மாநகராட்சி உயர் அலுவலர்கள்
உள்ளடக்கிய உயர்மட்ட ஆய்வுக்குழு ஜெ.எஸ் நகர் ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்கள்.