செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த தந்தை இழந்த இரண்டு பிள்ளைகள்(4 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு) தங்களின் ஆண்டு கல்வித் தொகையை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில் சமூக ஆர்வலர் சு.யுனிஸ்கான் அவர்களை அணுகினர்.

அவர் கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் இரா பாஸ்கரன் ஒத்துழைப்போடு அந்த பிள்ளைகளின் ஆண்டு கல்வித் தொகையை இரட்டை சகோதரர்களாகான மருத்துவர் அ.மணிஅரசு மற்றும் அவரது சகோதரர் அ.அருள் ஆனந்த் ஆகியோர் வழங்கி அந்த பிள்ளைகளின் படிப்பை தொடர வழிவகுத்தனர்.