விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் முக்கிய சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளின் சிலருக்கு காயங்களும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளாதாகவும் இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நமது டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வாயிலாக செய்தி வெளியிட்டு அதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதின் விளைவாக ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி அழகேசன் அறிவுறுத்தலின் பேரில் ராஜபாளையம் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர்கள் சீமான் (நகர்) நவாஸ்தீன் (நெடுஞ்சாலை)ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலிசார் மாடுகள் கேட்பாரற்று சாலைகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது ஆகையால் மாட்டின் உரிமையாளர்கள் இதை உடனடியாக தடுத்து மாடுகளை தகுந்த இடத்தில் வைத்து பராமரிக்கவேண்டும் தவறும் பட்சத்தில் அனைத்து மாடுகளும் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலையில் விடப்படும் என அறிவிப்பு செய்துவருகின்றனர்