மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள்-மாநகர காவல் ஆணையர் தகவல்
மதுரை, பள்ளி- கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு – குழுக்கள் அமைக்க இருப்பதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறினார்.
விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மாநகர காவல் துறை சார்பில் மருந்து நிறுவனங்கள், மருந்து கடைகள், கொரியர் பார்சல் சேவை நிறுவனங்க ளுடனான போதைப்பொருள் ஏ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
காவல் துணை ஆணையர் (தெற்கு) கருண் கார வரவேற்றார். துணை ஆணையர் (போக்குவரத்து மற்றும் தலைமையி டம்) குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுரை மாநகரில் உள்ள கல்லூரி-பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக, மாநகரில் உள்ள 37 கல்லூரிகள், 254 பள்ளிகளில் 33 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள் எட்டுள் ளது. இதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கும் பணி நடக்கிறது. போலீஸ் அதிகாரிக ளுடன். மாணவர்களை இணைக்கும் வகையில்வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட இருக்கிறது.
போதை பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மருந்து நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகள் கேட்டால் கொடுக்கக்கூ டாது பழைய மருந்து சீட்டை காண்பித்தாலும் மாத்திரைகள் கொடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில், மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன், அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேஸ்வரன் மருந்து கட்டுப்பாட்டு துறைஉதவி இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர்.
முடிவில், துணை ஆணையர்(வடக்கு) மதுகுமாரி நன்றி கூறினார். இதில், மதுரை மாவட்ட வணிகர் சங்க மாநில உதவி தலைவர் பழனியப்பன். முதன்மை செயலாளர் பிச்சை மணி உள்ளிட்ட மருந்து நிறுவன உரிமையாளர்கள், மருந்து கடைக் காரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.