திருவாரூர்மாவட்ட திமுக வழக்கறிஞர்அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்து கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் ,

மூன்று குற்றவியல் சட்டங்களை முன்பு இருந்தது போலவே ஆங்கில மொழியில் தர கோரியும், மூன்று குற்றவியல் சட்டங்களையும் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைமுறைப்படுத்திடவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ்பெற கோரியும் , வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,

ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர்அணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் விநாயகமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர் அணி தலைவர் பஞ்சமூர்த்தி முன்னிலையில் வழக்கறிஞர்கள் இளஞ்சேரன் , நாகையன் , விவேகானந்தன் , கோவி. கண்ணன் , புரட்சித்தூயன் செல்வகுமார்

மற்றும் விசிக துணை பொதுச்செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ரஜினிகாந்த் , விசிக மைய மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன், மக்கள்அதிகாரம் நிர்வாகி ஆசாத் , திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ராஜ்கருணாநிதி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *