ஜவாஹிருல்லா மற்றும் அன்பழகன்
எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
கும்பகோணம் செட்டி மண்டபம் கருப்பூர் பைபாஸ் சாலையில் எக்பிரஸ் கார் சர்வீஸ்
திறப்பு விழா நடைப்பெற்றது.

விழாவிற்கு பரக்கத் பர்சீன் தலைமை தாங்கினார். செரு கடம்பூர் ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தார்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் எக்பிரஸ் கார் சர்வீஸ் நிர்வாக இயக்குனர் பரக்கத் அலி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு எக்பிரஸ் கார்ஸ் பணிமனைகளை திறந்து வைத்தனர்.
தலைமை அரசு கொறடா கோவி. செழியன், மனித நேய மக்கள் கட்சி துணை பொது செயலாளர் பாதுஷா, முன்னாள் மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன்,ஒன்றியகுழு துணை தலைவர் அழகு.த. சின்னையன், ஒன்றிய செயலாளர் உள்ளூர் கணேசன்,மாவட்ட செயலாளர் முல்லை வளவன், ம.தி.மு.க.ஸ்டாலின்,வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா,சங்க தலைவர் ஆன்டிரியோ
ரஸாரியா தொழில் அதிபர்கள் அஹமது தம்பி, முஹம்மது அலி, சாதிக்பாட்ஷா மற்றும் வர்த்தக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுமார் 3500 சதுர அடியில் நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்ட கார் கேர் சென்டரில் வாட்டர் வாஷ்,வீல் சீரமைப்பு பாகங்கள், கலர் போம் வாஷ், டச்லெஸ் போம் வாஷ், ஹெட் லைட் கிளீனிங் கிளாஸ் பாலிஷ் இன்டீரியர் கிளீனிங் சைலன்சர் கோட்டிங் போன்றவைகளுக்கு திறப்பு விழா சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.