விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு பணிகளுக்காக நகராட்சி சார்பில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இது குறித்து ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் உள்பட கட்சிகள் சார்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்ட நெடுஞ்சாலை துறையினர் ராஜபாளையம் காந்தி கலை மன்றம் பகுதியில் இருந்து ஐ. என். டி. யூ.சி. நகர் வரையிலான 1.8 கி.மீ.தூரத்தை புதிதாக சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.