அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள்பழனிச்சாமி, கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கருணை மருத்துவமனை மருத்துவர் இந்துமீனா, சந்தியா ஸ்பேசலிட்டி மருத்துவமனை மருத்துவர் சந்தியா, மற்றும் மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்தனர்
இந்த முகாமில் சளி காய்ச்சல் ஆஸ்துமா தைராய்டு நெஞ்செரிச்சல் உடலில் ஏற்படும் அரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கருத்தரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளித்தனர்
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.