செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சா.இரா. மணி, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியை சத்யபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் செந்தில் குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
மாணவர்கள் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும், மட்கும் குப்பை, மட்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து போடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு தகவல்களும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்வில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து போடுவதற்காக பள்ளிக்கு கூடைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது நன்றி கூறினார்.