பைக்கில் சென்ற விவசாயியை தாக்கி மிரட்டல் விடுத்த ரவுடி கைது
தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி( 45) விவசாயி இவர் ராஜபாளையம் அடுத்த அயன் கொல்லங் கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரியிடம் வைக்கோல் விற்பனை செய்து பணத்தை வாங்குவதற்காக அயன் கொல்லங் கொண்டான் சென்றுள்ளார்.
அது சமயம் அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் வீரன் (48) ஏற்கனவே இவர்மீது கொலை அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் பைக்கில் வந்த வேலுச்சாமியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். வேலுச்சாமி அவரிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கும்போது, திடீரென்று வீரன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியதில் வேலுசிமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது
இது குறித்து சேத்தூர் ஊரக போலீசில் விவசாயி வேலுச்சாமி புகார் செய்தார் புகாரின் பேரில் சேத்தூர் ஊரக போலீசார் வீரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்