பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் விசிக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விசிக கட்சி தலைவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து சின்னத்தை அங்கீகாரம் செய்த சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றியினை இச்செயற்குழு தெரிவித்தது

எதிர் வரும் ஜூலை 15ஆம் நாள் தியாகத்தந்தை தொல்காப்பியன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தஉள்ளதால் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நேரில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பாக நடத்த இச்செயற்குழு கேட்டுக் கொள்ள பட்டது

கடந்த 05.07.2024 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த அனைத்து சமூக விரோதிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கிராமங்களிலும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டி தேர்தல் விதிமுறை இருந்தது.தற்போது தேர்தல் விதிமுறை முடிந்த நிலையில் அனைத்து கிராமங்களிலும் நமது கொடிக்கம்பங்களை புதுப்பொலிவுடன் ஏற்ற வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது

வேப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எஸ்சி/ எஸ்டி மாணவிகளை பொதுப் பிரிவிலும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற உத்தரவு உள்ளது.ஆனால் கல்லூரி நிர்வாகம் இதற்கு ஒத்துழைக்காமல் சாதிய நோக்கத்தோடு செயல்படுகிறது. இச்செயலை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவனுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு ஒன்றிய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது

மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி இக் கூட்டம் நடைபெற்றது .இந்நிகழ்வில் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் உதயகுமார்,வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மேலும் கூட்டத்தில் விசிக மேனாள் மாவட்ட செயலாளர்.தமிழ்மாணிக்கம். மண்டல துணை செயலாளர். மாறன் . மாநில துணை செயலாளர் தமிழ்க்குமரன்.மாவட்ட அமைப்பாளர்
கதிர்வாணன்.செந்தில்குமார்.வழக்கறிஞர்கள் அண்ணாதுரை .அழகேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சக்சஸ் சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினார் இறுதியில் குன்னம் கிளை செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *