நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
நாகையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது…
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில் மின் வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக திட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.இந்த போராட்டத்தினை சிஐடியூ மாவட்ட செயலாளர் தங்கமணி தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய போது; காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும் வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள Re Demployment Discontinued உத்திரவுகளை திரும்ப பெற வேண்டும் எனவும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் மின் விபத்தில் உயிரிழக்கும் மின் வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணையை வாரியத்திற்கு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.இதில் திட்ட செயலாளர் கலைச்செல்வன், சீர்காழி கோட்ட தலைவர் ஸ்டாலின், கோட்ட செயலாளர் குணசேகரன்,நாகை கோட்ட தலைவர் செபஸ்டியன், திட்ட இணை செயலாளர்கள் சிவராஜன், இளவரசன், சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர்கள் சிவனருட்செல்வன், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.