காட்டுமன்னார்கோயில்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கால்நாட்டாம்புலியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பதஞ்சலிஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் சிகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது சிவனடியார்களின் சார்பில் கோவிலுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதியதாக தேர் செய்து கொடுக்கப்பட்டது
இதனை அடுத்து தேர் திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது பின்னர்
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி எழுந்து அருளினார்
அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேர் முக்கிய விதிகள் வழியாக சென்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜெயச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெற்றதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்