தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் மாணவர்களை வரவேற்றார்.
அஞ்சலக துறையின் செயல்பாடுகள் ,பயன்கள் குறித்து அஞ்சலக தலைமை அதிகாரி செல்வராஜ் மற்றும் அஞ்சலக அலுவலர்கள் அனைவரும் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.
வெறும் 25 காசுகளில் தகவல் தொடர்பு சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் அஞ்சல் துறை மட்டுமே என்று பெருமையுடன் கூறினார்.10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால் அஞ்சல் துறையில் மிக எளிதாக பணிக்கு வரலாம் என்று கூறினார்.
மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சார்பில் இனிப்புகளும் பேனாக்களும் வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.