அலங்காநல்லூர், -மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, ஒன்றிய பொருளாளர் ரேவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் விஜயகுமார் வரவேற்று பேசினார்.
மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் கொடி ஏற்றி பெயர்பலகை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் குரு பாலமுருகன், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன் குமார், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குணசேகரன், கிளைச் செயலாளர் நாராயணன், கிளை தலைவர் முருகன், பொருளாளர் ராஜ்குமார், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.