தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலம் பாதியாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து வருகிறது அதன்படி நேற்று மேற்கு மண்டலத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் முகம் நடைபெற்றது அதில் 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது
பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணும் வகையில் 40 மனுக்களுக்கு இன்று தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆர்டர் வழங்கப்பட்டது மேயர் ஜெகன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சியில் வாரம் வாரம் அந்தந்த மண்டலத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் முகம் நடைபெற்று வருகிறது
மக்கள் மாநகராட்சி தேடி அலையக்கூடாது என்ற எண்ணத்தில் மக்களை தேடி மாநகராட்சி தற்போது வந்து கொண்டுள்ளது பெறப்படுகின்ற மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
சொத்துவரி பெயர் மாற்றம் குடிநீர் இணைப்பு குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட புகார் மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது
என்று மேயர் ஜெகன் கூறினார் அதன்பின்பு 40 பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்களை மேயர் ஜெகன் வழங்கினார்
நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர் ஒரு காலத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை தேடி வந்த பொதுமக்கள் தற்போது மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை தேடி செல்கிறது என்பதுதான் பெருமையாக உள்ளது