திருப்பூர் மாவட்டம்
பல்லடத்தை எடுத்த கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தெய்வசிகாமணி இவரது ஏழு ஏக்கர் நிலத்தை போல ஆவணம் மூலம் முத்து சுப்பிரமணியம் என்பவரின் தரப்பினர் போல் ஆவணங்களை வைத்து மூலப்பத்திரம் இன்றி 2024 இல் கிரையம் செய்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு வைத்து சார் பதிவாளர் உமா மகேஸ்வரி இடம் தெய்வசிகாமணி தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
அப்போது தங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று தெரிவித்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த தெய்வசிகாமணியின் வாரிசான நேதாஜி என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அங்கு வந்த விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது