மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழக அளவில் தனது 28 வது கிளையாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது புதிய ஷோரூமை துவங்கியது..

உலக அளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தமழக அளவில் 28 வது கிளையாகவும், கோவையில் 3 வது கிளையாக ஆர் எஸ். புரத்தில் திறந்துள்ளது.

புதிய ஷோரூம் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K.அர்ச்சுணன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் பதிவாளர் டாக்டர் தமிழ்வேந்தன்,நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்..

விழாவில், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர்,மண்டல வணிக தலைவர் சபீர் அலி,மேற்கு மண்டல தலைவர் நௌசாத்,கோவை ஆர்.எஸ்.புரம் கிளை தலைவர் அனீஸ் ரஹ்மான் உட்பட மலபார் கோல்டு டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

புதிதாக துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மேலும் பிரத்யேக டிசைன்களாக,அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா ,மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’

குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *