இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30 ந்தேதி தேசியதலைவர் உ.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நிகழ்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கமுதி துணைக்காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உடன் கமுதி காவல்நிலைய ஆய்வாளர், சார்பு ஆர்வாளர்கள் இருந்தனர்.