கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டப அரங்கில் கோலாகலமாக துவங்கியது.
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நடைபெறும் இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,என பல்வேறு பொருட்களுக்கான நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..
கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கடந்த பத்து ஆண்டுகளாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.
தனது பத்தாவது ஆண்டை கொண்டாடும் விதமாக ஸ்பைஷல் எடிஷன்,சிறப்பு விற்பனை கண்காட்சியாக கோவை அவினாசி சாலையில் சுகுணா திருமண மண்டப அரங்கில் கோ கிளாம் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது.
ஜூலை 12,13,14 ந்;தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..முன்னதாக,கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,,ரூபா ஸ்ரீனிவாசன்,உமா மூர்த்தி,யுகி,டி.ஏ.ஆர்.புவனா,பிரியா,அக்ருதி தலைவர் துளசி சேது,அழகு கலை நிபுணர் மவுனிஷா,பார்தி துரை ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்…