தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில்உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அடுத்த படியாக இங்கு பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் 2001-ல் மாசி மாதம் பெளர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடு, மகா சிவராத்திரி ஆடி அமாவாசை, ஆடி 18 ஆம் பெருக்கு, ஆண்டு விழாவாக மகா கார்த்திகை தீப திருவிழா இப்படி பல நிகழ்ச்சிகள் அன்பர் பணி செய்யும் பராமரிப்புகுழு அன்பர்களால் மற்றும் பக்தர்கள், ஆன்மீக பெரியோர்கள் பொதுமக்கள் ஆதரவுடன் தொடர்ந்து செய்து வருகிறன்றனர்.
29/6/2012 ஆனித் திங்கள் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து வருடம், வருடம், வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது
ஒவ்வொரு பெளர்ணமியன்று மாலை அன்னதானமும், ஆடி அமாவாசை, கார்த்திகை தீப திருநாள் அன்று அன்னதானமும் பிரதோஷம் , ஆடி 18 பெருக்கு, தேய்பிறை
அஷ்டட்டமி மற்ற விஷேச நாட்களில் பிரசாதமும் கட்டளைதாரர்கள் சார்பாகவழங்கி வருகிறோம்.
இங்கு வரும் பக்தர்கள் மனமுருகி வேண்டும் வேண்டுதல்கள் நிறைவேருவதாக பக்தர்கள் கூறி வருவதால் பல மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள் மன அமைதிக்கு சிறந்த இடமாக இருப்பதால் தியானம் செய்ய ஆன்மிக பக்தர்கள் அதிகமாக வருகை தருகிறார்கள் சட்டநாதர் தரிசனம் செய்து தியானம் செய்ததாக ஆன்றோர்கள் கூறி வருகிறார்கள்
நல்லதை எண்ண வைத்து அதையும் நடத்தி வைக்கின்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டு 12 ஆம் ஆண்டு வருசாபிஷேகம் 15/7/24 திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மேல் 10 .25 மணி வரை வருசாபிஷேகம்
நடைபெறுவதால் ஆன்மீக பெரியோர்கள், பொதுமக்கள் பக்தகோடிகள்கலந்து கொண்டு இறையருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு சார்பாக அழைக்கின்றோம்