ராஜபாளையம் சேனை தலைவர் சமுதாய கலை அரங்கத்தில் அருள் பாவித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் சுவாமிக்கு புனரோத் தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது
மாலை 6 மணிக்கு மேல் மங்கள இசை மஞ்சள் விநாயகர் பூசை மண்டல பூஜை வேத பாராயணம் திருமுறை பாராயணம் முதல் கால யாகசாலை பூசை சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து தீப ஆராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது தொடர்ந்து எந்திர பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் மங்கள இசை விநாயகர் பூஜை மகா சங்கல்பம் கும்பபூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணா ஹுதியாத்ரா தானம் கடம் புறப்பாடு தொடர்ந்து கலசத்திற்கு புனித நீர் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் சுவாமிக்கு மகா அலங்கார அபிஷேகம் மகா கும்பாபிஷேகம் தீபா ஆராதனை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது
கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஜி வெங்கட்ராமன் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மங்கள விநாயகர் சுவாமி அருள் பெற்று சென்றனர்
அதனை தொடர்ந்து பக்தர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்