தென்காசி, ஜுலை – 11
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 314 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன் தலைமை தாங்கி சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார.
அதனைத் தொடர்ந்து தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகுசுந்தரம், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் எம்.பி.எம். அன்பழகன், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரகுமான், தென்காசி யூனியன் கவுன்சிலர் மல்லிகா சரவணன், மேலகரம் பேரூர் திமுக செயலாளர் இ.சுடலை, பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் கரிசல் அ.ராஜராஜன், வெள்ளத்துரை மாவட்ட திமுக அணிகளின் அமைப்பாளர்கள் ஜே.கே.ரமேஷ், வளன்அரசு , ஆ.முத்துராமலிங்கம், ராமராஜ், கரிசல் வேலுச்சாமி, செல்வம், கஜேந்திரன், மங்கள விநாயகம், சுரேஷ் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.