செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியத்தின் பெருந்தலைவராக சாந்தி ராமச்சந்திரன் பொறுப்பேற்றார் துனை ஒன்றிய பெருந்தலைவராக சித்ரா ராஜேந்திரன் பொறுப்பேற்றார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைப்பெற்று முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால் அவர் பொறுப்பேற்று கொண்டார்.
முன்னதாக திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த பாபு அவர்களின் மனைவி சுப்புலட்சுமி பெருந்தலைவராக இருந்தார்.
அவர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதில் அவர் தோல்வி அடைந்தார் .அதன் பின்பு இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள ராமச்சந்திரன் அவர்களின் மனைவி சாந்தி ராமச்சந்திரன் தற்போது ஒன்றிய பெருந்தலைவராக தேர்வாகியுள்ளார்