பெரியகுளம் அருகே ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் இ.பெரியசாமி துவக்கி வைத்தார்;

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார் (பெரியகுளம்),மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட அலுவலர் அனிதா ஹனிப் வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் இந்தியாவிலேயே கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டமும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டமும் செயல்படுத்தி வருகிறார்.

அதேபோல் நகர் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்ததைப் போல் தற்போது ஊராட்சி பகுதியிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற மனப்பான்மையுடன் சாதி,மதம் ஆகியவைகளை கடந்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

இந்த மக்கள் முதல்வர் திட்ட முகாமில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும்,பணியாளர்களும் உள்ளனர் இங்கேயே கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படுகிறது என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,லட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி சந்திரன்,சருத்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கண்ணையா,எண்டப்புளி ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பாண்டியன்,தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன்,வடுகபட்டி பேரூராட்சித் தலைவர் நடேசன்,பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். எம்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் லட்சுமிபுரம்,சருத்துப்பட்டி,ஜல்லிபட்டி,வடபுதுப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *