தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சப்பை விழிப்புணர்வு.
தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்பு அறம் செய் அன்பு ராஜா மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை காண வரும் உறவினர்கள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளில் எடுத்துச் செல்பவர்களை அழைத்து அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை மஞ்சப் பையான துணிப்பையில் எடுத்துச் செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அவர்களுக்கு தான் எடுத்து வந்த துணிப்பையான மஞ்ச பையில் உணவுப் பொருட்களை மாற்றி துணிப் பைய்யான மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பொதுமக்கள் எடுத்து வந்த நெகிழிப்பைகளை வாங்கி வைத்து மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் போடப்பட்டது.
மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் நெகிழிப்பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவமனையில் கழிவறை குழாய்களில் அடைப்பு ஏற்படுவது குறித்தும்,சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது