விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ் தலைமையில், டைகர் சம்சுதீன், வட்டாரத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஆ. ரெங்கசாமி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகையையும் அவதூறாக பேசி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம், லட்சுமணன், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் காளிதாஸ் உள்பட ஏராளமானோர் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து பேசினார்கள்