வலங்கைமான் வரதராஜன்பேட்டை சித்தன் துறை ரோட்டில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பாடைக் காவடி திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடி எடுப்போர் வழிபாட்டுக்காக சித்தன் துறை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் புதிதாக 2009-ல் கட்டப்பட்டு, கடந்த 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, பொருள் காப்பகம் கட்டப்பட்டு கடந்த 10 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, 12ஆம் தேதி காலை நான்காம் காலம் யாகசாலை பூஜை உடன் நிறைவடைந்து, காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடும், 8 45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 8:55 மணிக்கு ஸ்ரீ மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலயம், பொருள் காப்பகம் அமைவதற்கு இடவசதி கொடுத்த வலங்கைமான் வாணிய வைகிய சமூகம் அறங்காவலர் இ. எஸ். சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன், நகர செயலாளர் பா.சிவநேசன், அஇஅதி முக நகர செயலாளர் சா. குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளை திப்புராஜபுரம் சர்வ சாதகம் டாக்டர் ஜெ.சுரேஷ் (எ) வெங்கடேச சிவாச்சாரியார், வலங்கைமான் வரதராஜன் பேட்டை இரா. செல்வம் பூசாரி யார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு ஸ்ரீ விநாயகர் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவாசிகள் நலச்சங்கம், பஞ்சாயத்தார்கள், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் உபய தாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.