குறுகிய சாலையால் அவதியுரும் வாகன ஓட்டிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது இரு மாநிலங்களை இணைக்கும் பாலமாக உள்ளது.கேரளா ,மற்றும் கர்நாடகா பகுதியிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடலூர் வழியாகத்தான் உதகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

கூடலூர் பகுதியில் அமைந்துள்ள மேல்கூடலூர் என்ற இடம் மிக குறுகிய தேசிய நெடுஞ்சாலையாகவும் அதிகளவு வாகன நெரிசல் ஏற்படும் இடமாகவும் இருந்து வருகின்றது.இங்கு சுற்றுலா தின சமயங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா வரும் பயணிகளாலும், வாகனங்களாலும் மேல் கூடலூர் பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது.பல ஆண்டுகாலமாக இந்த நெடுஞ்சாலையானது எந்த ஒரு சீரமைப்பும் இல்லாமல் குறுகி காணப்படுகிறது.அரசு தலைமை மருத்துவமனையும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளதால் அவசர ஊர்தி வந்தால் கூட வாகன நெரிசலால் சிக்கி நோயாளிகள் உயிருக்கு போராடி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புலம்பி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையினை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிங்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *