மதுரை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் ஒலிபதிவு செய்யப்பட்டது.

                                                 மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர் வேல்முருகன்,   ஆர்.ஜெ .ஜெயப்ரியா  ஆகியோர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர்.பள்ளி மாணவர்கள்  ரித்திகா  திருவிழிமழலை  பாடலையும்,வள்ளியம்மை காமராஜர் பற்றிய உரையும் ,முகல்யா ,தர்ஷினி  ஆகியோர் ஹெலன் ஹெல்லர் தொடர்பாக உரையாடலும்,லெட்சுமி,ஓவியா,கனிஷ்கா,தவதுர்கா  ஆகியோர் செல்வதில் உயர்ந்த  செல்வம்  கல்வி செல்வமே! பொருள்செல்வமே! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் ,அஜய், யோகேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாடு தினம்  தினம் தொடர்பாக உரையாடலும்  ,கவிஷா ஜான்சிராணி  தொடர்பாக பேச்சும், லெட்சுமி,நந்தனா ஆகியோர் நாரதர் சந்தித்த நாட்டுக்கோட்டை மாதரசி  உரையாடல் நிகழ்த்தினார்கள்.ஆசிரியை முத்துலெட்சுமி,டெனிஷா ஆகியோர்  மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *