கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1999 இல் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் மாணவ சங்கத் தலைவர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வீணா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கி அனைவரையும் பாராட்டி, இந்த 25 ஆண்டுகளில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை வளர்ந்த விதத்தை கூறினார்.

விழாவிற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் டாக்டர் என்.ஆர். அலமேலு மற்றும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் எ.சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியதுவத்தை பற்றி கூறினர்.

1999 இல் இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் 125க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் குடும்பத்துடன் விழாவிற்கு வருகை புரிந்து கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்களுடைய கல்லூரி கால அனுபவங்களையும் இன்று கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்கள், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும், தற்போதைய திறன் படைத்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கு ஊக்கம் தருவதற்காக ரூபாய் 25 லட்சத்திக்கான காசோலையை வழங்கினார்கள். விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக காபி டேபிள் புக் வெளியிடப்பட்டது.

மேலும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் துறைதலைவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர் விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் வீணா, செயலாளர் செந்தில் கண்ணன் மற்றும் பேராசிரியர் பெருமாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *