தேனிமாவட்டம் கம்பம் அருகே பி எல் ஏ நர்சரி கார்டன் திறப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் சேவை நோக்கில் பி.எல் ஏ.நர்சரி கார்டன் தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் எம் பி நர்சரி கார்டனி ல் இலவசமாக மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநிலகாங்கிரஸ் தேனி தெற்கு மாவட்ட தலைவர் செல்வேந்திரன் மதிமுக மாவட்ட செயலாளர் வி எஸ் கே. ராமகிருஷ்ணன் கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் பேரூர் திமுக செயலாளர் எம் டி எம் பார்த்திபன் கே ஏ சுப்பையா ஓ ஆர் நாராயணன் காமயகவுண்டன்பட்டி ராம்குமார் நேதாஜி அறக்கட்டளை நிறுவன தலைவர் சோ. பஞ்சுராஜா நாராயண தேவன் பட்டி காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே வீட்டுக்கு ஒரு பிள்ளைகளை வளர்ப்பது போல் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேவை நோக்கில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விதை பந்துகள் வழங்கப்பட்டது .
பெஸ்ட் மணி கோல்ட் அதிபரும் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருமான பி எல் ஏ. ஜெகநாத் மிஸ்ராவின் உடன்பிறவா சகோதரர் ரகுபதி அனைவரையும் வரவேற்று கனிவுடன் உபசரித்து நன்றி கூறினார்