மதுரை மாநகர் கீரைத்துறை எல்கைக்குட்பட்ட வேலம்மாள் மருத்துவமனை அருகில் புதிய புறக்காவல் நிலையத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.
சிந்தாமணி பகுதி பொதுமக்கள்,
மருத்துவமனை பயன்பாட்டாளர்கள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதியும், நெடுஞ்சாலையில் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப் பட்டது.
மேலும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை எளிதில் அடையாளம் காணவும் , குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், புறக்காவல் நிலையத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுமேலும் பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களின் நலன் கருதி இங்கு 24 மணி நேரமும் தொடர்ந்து காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உடன் மதுரை மாநகர துணை ஆணையர் கள் , உதவிஆணையர் கள், மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.