தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நடைபெற்றது.
இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை யில் நடந்த இந்த கூட்டத்தில், அடுத்த நான்கு ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்
பட்டனர்.
சங்கத்தின் புதிய தலைவராக திருநெல்வேலியை சேர்ந்த திருமாறன் தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொருளாளராக கே.டி. முரளிதரன், இணை செயலாளர்களாக மதுரை கண்ணன், இளங்கோவன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி முதற் கொண்டு பல்வேறு தரப்பில் நீச்சல் பயிற்சி அளித்து, நீச்சல் விளையாட்டை மேம்படுத்தவும், இன்னும் அதிக அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்தி பல போட்டியாளர் களை உருவாக்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.