விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் மற்றும் போலீசார் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சங்கரன்கோவில் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அது சமயம் வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினார்கள். அவர்கள் வந்த வாகனத்தை சோதனை போட்டதில் ஒரு பொட்டலம் காணப்பட்டது. அதை பிரித்து பார்க்கும்போது அது கஞ்சா என்று அறிய வந்தது.
அதன் எடை ஒரு கிலோ 100 கிராம் ஆகும். ராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கு பகுதியைச் சேர்ந்த சபரி 25, சத்யபிரகாஷ் 23 மற்றும் இந்திரா காலனி சேர்ந்த யோக வசந்த் 22 ஆகிய மூவரையும் கைது செய்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜபாளையம் மலையடிப்பட்டி தெருவை சேர்ந்த கார்த்திக் வயது 24 என்பவரை தேடி வருகின்றனர்.