தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜூலை- 15. தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலராக பணியாற்றிய கந்தசாமி தலைமையில் 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தனர்.
தஞ்சை மண்டல நாம் தமிழர் கட்சி செயலர் கந்தசாமி நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக பல வருடங்களாக பணியாற்றியவர் இவர் மாவட்ட செயலாளர் பதவியிலும் பின்னர் மண்டல செயலாளராகவும் பணியாற்றினார் இவருக்கு கட்சியின் சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளர் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்தவர்கள் மாவட்ட முன்னாள் தலைவர் கலைவேந்தன், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலர் சரவணன், பொருளாளர் இளம்பரிதி, இளைஞரணி செயலர் ராஜீவ்காந்தி, நிர்வாகி தமிழ்முருகன், மாணவர் பாசறை செயலர் இனியவன் உட்பட 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் பாஜவில் நேற்று இணைந்தார்.