கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் காமராஜர் பிறந்த தின விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ் துறை சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவன செயலாளர் கம்பம் நா. ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என். எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது
கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுக்கு கட்டுரை போட்டி கவிதை போட்டி பேச்சுப்போட்டி ஓவிய போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் நன்றி கூறினார்