கோவை
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் போனிக்ஸ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா விழாவை முன்னிட்டு அரசு பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், உயர்கல்வி பயில உதவி தொகை வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் போனிக்ஸ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 4வது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிரான்ட்ரீஜன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆளுநர் நியமிப்பு(2026-27) மாருதி,துணை ஆளுநர் சென் இராமநாதன் மற்றும் GGR அபிஷேக் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 2024-25 ஆம் ஆண்டின் புதிய தலைவராக முருகன் மாரியப்பன், செயலாளராக கருப்புசாமி மற்றும் போர்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பொறுப்பேற்பு விழாவில் இரண்டு அரசு உயர் நிலை பள்ளிக்கு Sanitary incinerator மற்றும் RO Purifier வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரி மாணவிக்கு உயர் கல்வி பயில உதவி தொகை வழங்கப்பட்டது.இந்த ஆண்டு செய்யவிருக்கும் நலத்திட்டங்களை பற்றி போனிக்ஸ் சங்கத்தின் தலைவர் முருகன் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சுந்தரராஜன், பாலமுருகன், சக்திவேல் உள்ளிட்ட ரோட்டரி கிளப்பை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.