தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் காமராஜ், கோபிநாத். இவர்கள் பல்லாக்கு ரோடு சாலையில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடையில் முன் பகுதியில் பேப்பரால் சுற்றப்பட்டு ஒரு பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சகோதரர்கள் அந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் தங்க நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த நகையை சகோதரர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். கடை முன்பு கிடந்த நகையை ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டி உள்ளனர். இந்த நகை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.