வைத்தீஸ்வரன் கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சண்முக தேசிகர் நிலைய முதல் தளம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

     பள்ளியின் புரவலர் தருமை  ஆதீனம் 27- வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி  இயக்குநர்  S.கண்ணப்பன் அவர்கள் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.

பள்ளி செயலர் V. பாஸ்கரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவி M.சங்கரிக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பு விருந்தினர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின், யோகாசனம், பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

விழாவில் சிறப்பு விருந்தினர் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் சமய தமிழையும் சங்கத் தமிழையும் வளர்க்கும் தருமை ஆதீன மடம் பற்றி மிகவும் சிறப்பாக பேசினார்கள். கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து உலகின் தலைசிறந்தவர்களாக
உருவாக்கி யுள்ளார் கள்.

எனவே கிராமப் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகிய நீங்களும்
சிறப்பாக கல்வி பயின்று சிறந்த மனிதர்களாக உருவாக வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நிர்மலா ராணி,.ஞானசங்கர்,சாந்தி,வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி தலைவர் திருமதி.பூங்கொடி பள்ளி நிர்வாகக் குழு தலைவர் I. ராஜேஷ், செயலர் V.பாஸ்கரன், பொருளர்S.பாஸ்கரன், தருமபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் சித்தர்காடு நடுநிலைப்பள்ளி செயலர் சுவாமிநாதன் மயிலாடுதுறை பள்ளி முதல்வர் சரவணன் திருக்கடையூர் பள்ளி முதல்வர் ஸ்ரீகாந்த், தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி செயலர் செல்வநாயகம் முதல்வர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வைத்தீஸ்வரன் கோயில் சென்ட்ரல் லயன் சங்கத்தினர் ஐந்து மின்விசிறிகளை
பள்ளிக்கு நன்கொடையாக
வழங்கினர் மங்கைமடம் நடராஜன் அவர்கள் பள்ளிக்கு நன்கொடையாக ரூபாய் 30,000
வழங்கினார்கள்.

மேலும் பெற்றோர்களை மதித்து வாழ்வியல் நெறிமுறைகளை பின்பற்றி திறமையான மாணவர்களாக வளர்ச்சி பெற வேண்டும் என்றும்,சைவமடங்கள் தான் தமிழை வளர்த்தது என்றும்,கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சிறந்து
தங்கள் வாழ்வையும். சமுதாய நலனில் அக்கறையுள்ளவர்களாகவும் மாற வேண்டும் என்று ஸ்ரீலஸ்ரீ குருமா சந்நிதானம் அவர்கள் தனது ஆசியுரையில் தெரிவித்தார்கள்.

பள்ளி முதல்வர் A.ஜெகதீஷ்குமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி செயலர் அவர்களின் வழிகாட்டலில் முதல்வர், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *