எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ மந்த கருப்பண்ணசாமி ஸ்ரீ முன்னடியான் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் ஸ்ரீ காளியம்மன் ஆலய 14 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா திருநாள பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பழமை வாய்ந்த ஸ்ரீ மந்த கருப்பண்ணசாமி ஸ்ரீ முன்னடியான் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் ஸ்ரீ காளியம்மன் ஆலய 14 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு கவர்ச்சியாக நடைபெற்றது.
விரதம் இருந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக மயிலாட்டம் மேலதாலங்கம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்று அவரவெலி அய்யா சன்னதியின் எதிர்ப்புறம் உள்ள திருநகரி ஆற்றில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விரதம் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
இந்த நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு முளைப்பாரி திருவிழாவை துவக்கி வைத்தார்.