தேனி கம்பம் சின்னமனூர் ஆகிய பகுதிகளில் தக்காளி விலை கடும் உயர்வு இல்லத்தரசிகள் அதிர்ச்சி தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான கம்பம் போடி தேனி பெரியகுளம் கூடலூர் ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்பொழுது தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதியில் சீதோஷ்ன நிலை மாற்றமாகி கனமழை பெய்து வருகிறது. கடும் மழைப்பொழிவு காரணமாக தக்காளி செடிகளில் அழுகல் ஏற்பட்டு முக்கிய மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி தேனி கம்பம் ஆகிய மார்க்கெட்டுகளில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 1300 ரூபாய்க்கு ஏலம் போனது
இதனால் ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்பனையாவதால் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்
இது குறித்து இல்லத்தரசிகளிடம் கேட்டபோது தக்காளி அனைத்து விதமான சமையலுக்கும் முக்கிய தேவையாக உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாவது தக்காளி வாங்குவதில் குடும்ப பட்ஜெட் அதிகரித்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம் மேலும் தக்காளி வரத்து கம்மியாக வருவதாக வியாபாரிகள் கூறினாலும் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் விலை கூடுதலாக ஆவதற்கு வியாபாரிகள் வழி செய்கின்றனர்
எனவே உழவர் சந்தை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் தக்காளிப் பதுக்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளை கண்டு கடும் நடவடிக்கை எடுத்து தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்