மதுரை மாநகராட்சியில் 3வது நாளாக தூய்மை பணி யாளர்கள் பணிகளைப்புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகராட் சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள், சுகாதா ரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கண் காணிப்பதற்காக வார்டு வாரியாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் 50, 51, 52, 54, 55, 76, 77 ஆகிய வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமையை கொடுப்பதாக புகார் எழுந் துள்ளது. மேலும், ஏற்க னவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக பணி செய்ய வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுகாதார ஆய் வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.
மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தின் முன்பாக, தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் அம்சராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பணிகளைப் புறக்கணித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.